Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 31 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சாலேமார் மாவட்டத்தில் வசித்து வருபவர் கோமாராம். இவர் அதே ஊரில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 24ஆம் திகதி வழக்கம் போல கடையைத் திறக்கச் சென்றுள்ளார்.
அப்போது கடையில் இனிப்புகள் அங்குமிங்கும் சிதறி இருப்பதையும், பணப்பெட்டியில் பணம் திருடப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் கடையில் கொள்ளை அடித்த திருடன், உரிமையாளருக்கு 2 பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.
அக்கடிதத்தில், "ஹலோ சார், நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக நுழையவில்லை. எனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவே வந்தேன். நான் உணவருந்தி இரண்டு நாட்கள் ஆகின்றன. ஒரே பசியாக இருந்ததால், உங்கள் கடைக்கு உணவருந்த வந்தேன். நீங்கள் ஏழை என்பதை நான் அறிகிறேன். அதனால் தான் ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகின்றேன். எனது காலில் அடிபட்டுள்ளதால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் பணப்பெட்டியில் இருந்த 7000ரூபாய் பணத்தையும் நான் எடுத்துக்கொண்டேன். நீங்கள் இது குறித்து பொலிஸாரிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி." இவ்வாறு எழுதியுள்ளான்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர், பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும், இது குறித்து புகார் அளிக்க அவர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
9 minute ago
14 minute ago
18 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
18 minute ago
26 minute ago