2026 மார்ச் 07, சனிக்கிழமை

எதிரெதிர் இடங்களில் எதிரெதிர் துருவங்கள் தேர்தல் பிரசாரம்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 29 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்

முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலினும், ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமியும் பிரசாரம் செய்தனர்.

சேலத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் எடப்பாடி தொகுதிக்கு சென்றார். அங்கு, திமுக வேட்பாளர் சம்பத் குமார், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோருடன் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 எடப்பாடி, கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் அவர்   நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், வாகனத்தில் சென்றவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் பலர் ஸ்டாலினுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும், எடப்பாடியில் உள்ள தேநீர் கடையில் வேட்பாளர் சம்பத்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்து ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜராமை ஆதரித்து முதல்வர் பழனிசாமி  பேசியதாவது:

சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் இருந்தபோது கொளத்தூர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சி வந்த பிறகே கொளத்தூர் தொகுதிக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செய்யப்பட்டன. இப்போது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தொகுதிக்கு வந்து ஸ்டாலின் முகத்தை காட்டி செல்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விடும். அராஜகம் தலைவிரித்தாடும். பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே உதயநிதி ஸ்டாலின், டிஜிபியை மிரட்டுகிறார். இங்கு அரசு ஊழியர்கள் அதிகம் பேர் உள்ளீர்கள். அதிமுக ஆட்சியில் நீங்கள் நிம்மதியாக உங்கள் பணியை செய்து வருகிறீர்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .