A.K.M. Ramzy / 2021 மார்ச் 10 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
பஞ்சாபின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா மீது போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் போலி பாஸ்போர்ட் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து அமுலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் சுக்பால்சிங் கைராவுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமுலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன்படி பஞ்சாப், சண்டிகார், டெல்லி மற்றும் அரியானாவிலுள்ள எம்.எல்.ஏ. மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களில் அமுலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் சுக்பால் சிங் கைராவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .