A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
பல்வேறு நாவல்கள், சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இறக்கும் போது வயது 78.
எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம், திருச்சியில் இவர்,இதுவரை 1,500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைக்காட்சி நாடகங்கள், 3 மெகா தொலைக்காட்சித் தொடர்கள், 3,500க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும், 40 சரித்திரச் சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
ஆன்மிகச் சொற்பொழிவுகளில் புகழ்பெற்ற லட்சுமி ராஜரத்னம், செந்தமிழ்ச் செல்வி, சொற்சுவை நாயகி என்ற பட்டங்கள் பெற்றவர். டாக்டர் பட்டமும் வாங்கியவர். நிறைய ஆன்மிக நூல்களும் எழுதியுள்ளார்.
15 minute ago
53 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
7 hours ago