Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 19 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக, மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், ஆந்திரா உளவுத்துறையுடன் இணைந்து தெலுங்கானா உளவுத்துறை நடத்திய விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த சிராஜ் ஐதராபாத்தை சேர்ந்த சமீர் ஆகிய 2 பயங்கரவாதிகளும் ஐதராபாத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
சவூதி அரேபியாவில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த இருவரும் அங்கிருந்து வந்த உத்தரவு அடிப்படையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வெடிபொருட்களை வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இரு பயங்கரவாதிகளிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 minute ago
25 minute ago
27 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
27 minute ago
27 minute ago