2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒரு பிஸ்கெட் குறைந்ததால் ரூ.1 இலட்சம் இழப்பீடு

Freelancer   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை மணலி மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசெம்பர் மாதம் தெரு நாய்களுக்காக ரெண்டு 'சன் பீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

அந்த பிஸ்கட் பாக்கெட் கவரில் உள்ளே 16 பிஸ்கட்டுகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதைத் திறந்து பார்த்தபோது 15 பிஸ்கட்கள் தான் இருந்தது.  

இதுதொடர்பில், நிறுவனம் உரிய பதில் தராமையால், நீதிமன்றத்தில் மனுமொன்றை தாக்கல் செய்தார்.  பிஸ்கட் ​பக்கட்டின் நிறையின் பிரகாரமே விற்கப்படுகின்றது. எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லவென நிறுவனத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
காரணத்தை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம்  பிஸ்கட் பக்கெட் கவரில் 16 பிஸ்கட்டுகள் உள்ளே உள்ளன என்று தான் கூறப்பட்டுள்ளது. தவிர எடையை பற்றி கூறவில்லை. எனவே, நேர்மையற்ற முறையில் வியாபாரம் செய்ததற்காகவும், சேவை குறைபாட்டிற்காகவும் வழக்கு தொடர்ந்த டெல்லி பாபுவுக்கு ஐ.டி.சி., நிறுவனம் ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தீர்ப்பளித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X