2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை; மகன் கைது

Ilango Bharathy   / 2022 நவம்பர் 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புது டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைப்  படுகொலை செய்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் (22) இரவு குறித்த நபரின் வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இந்நிலையில் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது அங்கு 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அயலவர்கள் இது குறித்துப் பொலிஸாருக்குப் தெரியப்படுத்தியுள்ளதோடு, தப்பியோட முயற்சி செய்த இளைஞரையும் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்ததோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வைத்தியசாலைக்குப்  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் கேசவ் என்ற 25 வயதான குறித்த இளைஞர், மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனவும் சில தினங்களுக்கு முன்புதான் தனது குடும்பத்தினருடன்  மீண்டும் இணைந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் சம்பவத்தினத்தன்று ” மதுபோதையில் குடித்துவிட்டு தனது குடுப்பத்தாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர்கள் பணம் தர மறுத்ததாலேயே  ஆத்திரத்தில் அவரது தந்தை, தாய் ,பாட்டி மற்றும் தங்கையை கத்தியால் குத்தி கொடூரமாகக்  கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

 


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X