2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’ககன்யான்’முதற்கட்ட சோதனை வெற்றி

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம், தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X