A.K.M. Ramzy / 2021 ஜனவரி 07 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா:
கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டனுமான சௌரவ் கங்குலி இன்று வியாழக்கிழமை வீடு திரும்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் சிகிச்சை பெற்று வரும் உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் தலைவர் டொக்டர் ரூபாலி பாசு, செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சௌரவ் கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் புதன்கிழமை காலை முழுமையாக பரிசோதித்தனர். அவர் உடல்நலம் தேறிவிட்டார். புதன்கிழமையே வீடு திரும்புவதாக இருந்தது. இருப்பினும், மருத்துவமனையில் மேலும் ஒரு நாள் அவர் ஓய்வெடுக்க விரும்பினார்
. ஆகவே, அவர் வியாழக்கிழமை வீடு திரும்புகிறார். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.
சௌரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 அடைப்பு இருந்தது தெரியவந்தது.
38 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago
07 Mar 2026