Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரிசாவின், கட்டாக் நகரில் வசித்து வருபவர் ‘பெஹரா‘. 22 வயதான இவர் அண்மையில் நபர் ஒருவரிடன் 1,500 ரூபாவைக் கடனாக வாங்கியுள்ளார்.
மேலும் குறித்த பணத்தை 30 நாட்களில் திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த நாட்களுக்குள் அவர் அப்பணத்தைத் திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரமடைந்த அந்நபர், கடந்த 16 ஆம் திகதி அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து, பெஹராவின் கைகளை 12 அடி நீள கயிற்றால் கட்டி, அதன் மறுமுனையை தனது மோட்டார் இணைத்து, சுமார் 2 கிலோமீற்றர் தூரம் வரை அவரை இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், குறித்த வீடியோவானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது குறித்துப் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
48 minute ago
51 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
51 minute ago
4 hours ago