2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

கடும் பனிப்பொழிவால் காஷ்மீர் துண்டிப்பு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 07 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீநகர்:

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, மொகல் சாலை ஆகியவை கடும் பனிப்பொழிவு காரணமாக புதன்கிழமையும் மூடப்பட்டதால் தொடர்ந்து நான்காவது நாளாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டுள்ளது.

 காஷ்மீர் பள்ளத்தாக்கில் நீடிக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காஷ்மீரில் அதிக அளவில் பனிப்பொழிவு நீடிக்கிறது. பனி மூட்டமும், பனியுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சா லையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

ஜவாஹர் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள பனிக் குவியல் காரணமாகவும், சாம்ரோலி, மகர்கோட், பாந்தியால், மரோக், கஃபேடேரியா மோர், தல்வாஸ், நஸ்ரி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்சம் அத்தியாவசிய சேவைகள் வழங்குவது தடைபட்டுள்ளதை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.  

ஸ்ரீநகரில் இருந்து செல்லும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளும் நான்காவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .