2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கணவரின் அடங்காத ஆசை; ஆத்திரத்தில் அசிட் ஊற்றிய மனைவி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 01 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் இருந்த கணவரின் முகத்தில், மனைவி அசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம்,கான்பூரைச் சேர்ந்தவர் குப்தா.  40 வயதான இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி குப்தா மது அருந்திவிட்டு வீட்டுக்குத்  தாமதமாக வந்துள்ளார் எனவும், இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த அசிட்டினை எடுத்து குப்தாவின் முகத்தில் வீசியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அசிட் வீச்சுக்கு உள்ளான கணவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து , அவரது மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

 இந்நிலையில் குப்தாவின் மனைவியிடம்  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ” எனது கணவரிடம் பலமுறை மதுப் பழக்கத்தை நிறுத்துமாறு கூறினேன், ஆனால் அவர் அதனைக் கண்டுகொள்ள வில்லை ,இதனால் ஆத்திரத்தில் அவர் மீது அசிட்டினை ஊற்றினேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .