2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கணவர் கண்முன்னே மகளைக் கடத்திய தந்தை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளத்தை சேர்ந்தவர் வினித். 22 வயதான  இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ள நிலையில் அண்மையில், இருவரும் தமது வீட்டை விட்டுவெளியேறி திருமணம் செய்துகொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருத்திகாவின் தந்தை உட்பட 6 பேர் இணைந்து வினித்தின் முன்னிலையில் கிருத்திகாவைத்  தாக்கி காரொன்றில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வினித் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ள நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடத்தப்பட்ட கிருத்திகா குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .