Editorial / 2022 ஜூன் 21 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் வெளியாக திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இதில், ஹீரோவை இரண்டு பெண்கள் காதலிப்பார்கள். ஹீரோவும் இருவரையும் காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார்.
இறுதியில், இரு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறென உணர்ந்த ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். ஆனால்,
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை, இளைஞன் திருமணம் செய்த சம்பவமொன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பாண்டா கிராமத்தை சேர்ந்த இளைஞனும் தே பகுதியை சேர்ந்த பெண்ணொருவரும் 3 வருடங்களாக திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது.
இதனிடையே அந்த இளைஞன், மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கு பணிபுரிந்த இளம் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
இந்த காதல் அம்பலமானது. 2 பெண்களும் முதலில் எதிர்த்தாலும் அந்த இளைஞன், இரு பெண்களையும் சமாதானம் செய்து வைத்தார். அவர்களது குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஒருவழியாக, 2 பெண்களையும் சந்தீப் திருமணம் செய்து கொள்ள முடிவானது. ஆனால் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே சமயத்தில் இருவருக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து சந்திப் கூறுகையில், "2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் காதலிக்கிறேன். இவர்களில் ஒருவரை கூட விட்டு பிரிய முடியாது" என்றார்.
சமீபத்தில் வெளியாக திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இதில், இரண்டு பெண்கள் ஹீரோவை காதலிப்பார்கள். அதேபோல, இருவரையும் ஹீரோ காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார். இறுதியில், இரு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறென உணர்ந்த ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.
இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். இதில் இரண்டு பெண்களும் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
19 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
32 minute ago