Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் கைதிகளின் கன்னித்தன்மையைப் பரிசோதிப்பது சட்ட விரோதமானது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கேரளாவில் கடந்த 1992ஆம் ஆண்டு அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் தொடர்பான குற்ற வழக்கில் மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரை 2008ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு சி.பி.ஐ. உட்படுத்தியதாகத் தெரிகிறது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரி செபி முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா தீர்ப்பு அளித்தார்.
அத் தீர்ப்பில் "ஒரு பெண் கைதியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .