Freelancer / 2024 ஜூலை 25 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக, புனேயில் 4 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளப் பாதிப்புகளை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் ஆய்வு செய்தார்.
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.
இன்று (25) மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்த நிலையில், வெள்ளம் காரணமாக மும்பை புறநகர் இரயில் சேவை முடங்கியது.
மேலும், சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் மும்பை மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். புனே மற்றும் கோலாப்பூரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில், புனேயில் கனமழையால், 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளப் பாதிப்புகளை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் ஆய்வு செய்தார்.S
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago