2026 பெப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை

SIM பதிவு செய்தல் விதிகளில் திருத்தம்

Janu   / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல் மற்றும் 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட சிம் அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் -SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகள் 2019.08.02 அன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒழுங்குவிதிகள் அன்றைய தினத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள சிம் அட்டைகளுக்கு மாத்திரம் ஏற்புடையதாகும்.

அதனால், 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருசில சந்தாதாரர்கள் தொடர்பான தகவல்கள் தொலைதொடர்பு இயக்கும் கம்பனிகளிடம் இல்லாததுடன், அதனால் ஒருசில சட்ட விசாரணை நடவடிக்கைகளின் போது பிரச்சினையான நிலைமைகள் தோன்றியுள்ளன.

அத்துடன், 16 மற்றும் 17 வயதுக்கிடையிலான சந்தாதாரர்களைப் பதிவு செய்வதற்கும், எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகள் வழங்குவதற்கும் ஏற்புடைய புதிய ஏற்பாடுகளையும் உள்ளடக்கி தற்போது நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சிம் அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீள்பதிவு செய்வதற்காக ஏற்பாடுகளை தயாரித்து மற்றும் தற்போது 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகளைப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்து புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகம் செய்யப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .