Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 17 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூடியூப்பர்களால் `கடல் உணவின் சொர்க்கம்` என வர்ணிக்கப்பட்ட சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகமொன்றில், இறால் கறிதோசை கேட்ட வாடிக்கையாளருக்கு, கரப்பான் கறி தோசை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று பெண்ணொருவர் தனது கணவருடன் குறித்த உணவகத்திற்கு உணவருந்தச்சென்றுள்ளார். அங்கு 350 ரூபாய் விலையுள்ள இறால் கறி தோசை ஓர்டர் செய்த இருவரும் அதனை ஆர்வத்துடன் உண்டுகொண்டு இருந்துள்ளனர்.
இதன் போது குறித்த தோசைக்குள் இருந்து, இறந்த கரப்பான் பூச்சியொன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும், இது குறித்து உணவக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதனைச் சற்றும் எதிர்பாராத உணவகம், தமது தவறை உணர்ந்து தங்களை மன்னித்துக் கொள்ளுமாறு இருவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கரப்பான் தோசை தவிர்த்து ஏனைய உணவுகளுக்கு மாத்திரம் பணம் செலுத்திவிட்டு இருவரும் சென்றுள்ள நிலையில், அப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தியும்,வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு நேர்ந்ததைப் போல், வேறு யாருக்கும், இது போன்ற பாதுகாப்பாற்ற முறையில் தரமற்ற உணவு பரிமாறப்படக்கூடாது என்பதற்காக இச்சம்பவம் தொடர்பில் வீடியோக் காட்சியொன்றை தனது முக நூலில் அப்பெண் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு உணவகத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் சிறப்பாகவும், தரம் வாய்ந்ததாகவும் இருப்பதாக நற்சான்றிதழ் வழங்கிய இர்பான் உள்ளிட்ட பிரபல யூடியூப்பர்களை மக்கள் இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
38 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
42 minute ago
50 minute ago