Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
`சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பினைச் செய்து கொள்ள அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு” என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
‘யாருக்கு எந்த சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது‘ குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ் வழக்கின் தீர்ப்பானது கடந்த 29ஆம் திகதி வெளியாகியுள்ளது.
அதன்படி சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பினைச் செய்து கொள்ள அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும், இதில் திருமணம் செய்யாத பெண்களும் அடங்குவர்‘ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்” கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மாத்திரமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் எனவும், பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மாத்திரமே தடுக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago