Editorial / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்:
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதலமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது. ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்தார் என முதலமைச்சர் எட்டப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வனவாசி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதேபோல மறைந்த முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் இறந்த பொழுது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய வலியுறுத்தினார்கள். அதற்கும் கருணாநிதி, கர்மவீரர் காமராஜர் தற்போது முதலமைச்சராக இல்லை, ஆகவே, முன்னாள் முதலமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாதெனத் தெரிவித்தார். “அந்த அடிப்படையில் தான் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் நான் தெரிவித்தேன்” என்றார்.
கருணாநிதியின் பூதவுடலை அடக்கம் செய்ய, 2 ஏக்கர் நிலத்தை சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே கொடுக்கப்பட்டது. அதன் பெறுமதி 150 கோடி ரூபாயாகும். ஆனால் அதை பெற மறுத்து மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்கப்பட்டது.
“கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோர் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவை தான், நானும் பின்பற்றினேன். உண்மை இப்படி இருக்கையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரசாரம் செய்து வருகிறார்” என்றார்.

1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago