Editorial / 2021 மே 12 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறைகள் நிலவிவருகின்றன.

குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன.
இந் நிலையில் கொரோனாத் தொற்றாளர்களைக் காப்பாற்ற கர்நாடக அரசு புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில் ஒட்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய பஸ்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக 20 மாநகராட்சி பஸ்களில் 8 ஒட்சிஜன் சிலிண்டர்கள் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூர் அரச வைத்தியசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத் திட்டமானது இன்னும் ஒரு வாரத்துக்குள் மாநிலம் முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
37 minute ago
3 hours ago