2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணியான சிறுமி எரித்துக் கொலை

Ilango Bharathy   / 2023 மார்ச் 20 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கர்ப்பிணியான 16 வயதுச் சிறுமியை அவரது காதலன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றிலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவரே, அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமியொருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நாளடைவில் அச்சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி ”தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ”தனது காதலனை வற்புறுத்தி வந்துள்ளார்.

எனினும் இதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.  நாட்கள் செல்லச் செல்ல சிறுமி கொடுத்த நெருக்கடியால் ஆத்திரமடைந்த காதலன் அச்சிறுமியை தீ வைத்து, எரித்து கொலை செய்துள்ளார்.

அதேசமயம் சிறுமியின் பெற்றோரையும் இளைஞனின் பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞரைக் கைது செய்த  பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .