Ilango Bharathy / 2022 மார்ச் 30 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்ததால் அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் துசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைத்தியர் அர்ச்சனா. இவர் தனது கணவருடன் இணைந்து அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் கர்ப்பிணி ஒருவருக்கு அண்மையில் பிரசவம் பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பாராத விதமாக பிரசவத்தின் போது குறித்த கர்ப்பிணி உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அலட்சியமான மற்றும் தவறான சிகிச்சையால் தான் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளித்த வைத்தியர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அர்ச்சனா மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மன அழுத்தத்திற்கு உள்ளான அர்ச்சனா மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் நேற்று முன்தினம் (29) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago