2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கழலை நோயால் 5,000 மாடுகள் இறந்தன

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத் மாநிலத்தில் கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 5,000க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.  

இருப்பினும் இறந்துபோன மாடுகளின் சடலங்கள் பொது இடங்களில் குவிந்து கிடப்பதால் மனிதர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

'நாங்கள் உடல்களை சீக்கிரமாக அப்புறப்படுத்தவே முயல்கிறோம். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் குழிகள் தோண்டுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே சடலங்களை அப்புறப்படுத்த முடியவில்லை' என் புஜ் நகராட்சி நிர்வாக தலைவர் கன்ஷ்யாம் தக்கார் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 37,000 மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 1010 மாடுகள் இதுவரை இறந்துள்ளன. 1.65 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தோல் கழலை (கட்டி) நோய் என்றால் என்ன? கால்நடைகளுக்கு தோல் கட்டி நோயை ஏற்படுத்தும் 'லம்பி ஸ்கின் வைரஸ்' 1920-ல் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. பின்னர் கென்யா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X