2025 மே 09, வெள்ளிக்கிழமை

கழுகுகளுக்காக வழக்குத் தாக்கல்

Mayu   / 2024 ஏப்ரல் 04 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்க தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 5ம் திகதிக்குள் பதிலளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வனவிலங்குகள் ஆர்வலரான வழக்கறிஞர் சூர்யகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

 கடந்த 1980-ம் ஆண்டு இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்தன. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் 19 ஆயிரம் கழுகுகள் மட்டுமே உள்ளன. இயற்கையின் சுகாதாரப் பணியாளர்களாக செயல்படும் கழுகுகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

குறிப்பாக தமிழகத்தில் கழுகுகள் அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு நிமிசிலைடு, ப்ளூநிக்ஸின், கார்ப்ரோபென் போன்ற மருந்துகளை சட்டவிரோதமாக செலுத்துவதன் மூலம், அந்த கால்நடைகள் இறந்ததும் அவற்றின் மாமிசத்தை உண்ணும் கழுகுகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன.  அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X