A.K.M. Ramzy / 2021 ஜூன் 10 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை:
'ஒண்ணும் கவலைப்படாதீங்க....., சீக்கிரமே நல்லது நடக்கும்.....' என தோழி சசிகலா, அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க.) முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம், தொலைபேசியில் உரையாடிய பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தொலைபேசி ஊடாக தொடர்ந்த விவரம் வருமாறு:-
சசிகலா:- ஹலோ... ஆனந்தன்.... நல்லா இருக்கீங்களா...
ஆனந்தன்:- நல்லா இருக்கேன்மா... நான் உளுந்தூர்பேட்டை ஆனந்தன்மா...
சசிகலா:- என்ன இப்படி சொல்றீங்க... உங்களை நல்லா ஞாபகம் இருக்கு.
ஆனந்தன்:- தாயில்லா பிள்ளையாக தவிச்சுகிட்டு இருக்கோம்மா...
சசிகலா:- ஒண்ணும் கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நல்லது நடக்கும்.
ஆனந்தன்:- அரசியலில் இருந்து விலகி போறேனு நீங்க சொன்னதுல இருந்து, நானும் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டேன். அம்மாவுக்காகவும், இந்த கட்சிக்காகவும் நீங்க பட்ட கஷ்டங்களை எங்களால் மறக்கவே முடியாது.
சசிகலா:- சரி.... சரி... பழைய ஆட்கள் எல்லோருக்குமே தெரியுமே...
ஆனந்தன்:- உங்களை கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என மனசாட்சி இல்லாம பேசுறாங்களேம்மா... இந்த கட்சியை நீங்க காப்பாத்த வேண்டிய, தொண்டர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்மா?
சசிகலா:- நிச்சயமா... அதான் நான் எல்லோர் கிட்டேயும் பேச ஆரம்பிச்சுட்டேன். நிறைய கடிதங்கள் வருது. தொண்டர்கள் மிகவும் மன குமுறலுடன் எழுதுறாங்க... அதெல்லாம் பார்த்துட்டுதான் என் மனசு ரொம்ப வருத்தமாயிடுச்சு. அதுக்குப்பிறகு தான் இப்போ பேச ஆரம்பிச்சுருக்கேன். கட்சி நம் கண் எதிரேயே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமா இருக்கு. கட்சி இப்படியெல்லாம் போகுதே அப்படிங்குறப்போ, நான் நிச்சயம் தொண்டர்களுக்காக வருவேன்.
ஆனந்தன்:- அம்மாவுக்கு பிறகு நீங்கதான் எங்களுக்கு அம்மா. நீங்க வந்துதான் இந்த கட்சியை பழையபடி வளர்க்கனும்.
சசிகலா:- நிச்சயமா.... நிச்சயமா... நல்லா கொண்டு வந்துடலாம். தலைவர் காலத்துக்கு அப்புறம் அம்மா எப்படி கட்சியை வச்சிருந்தாங்க... எப்படி கட்சியை வளர்த்து கொண்டு வந்தாங்க... அதேவேலையை நாம் செய்வோம்.
இவ்வாறு அந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
35 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago