Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 26 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர் டீக்கடைக்கு செல்ல நடந்து சென்றனர். அப்போது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி இளம்பெண் ஒருவர் ஓடிவந்தார்.
சத்தம் கேட்டு மக்கள் அந்த பெண்ணை நோக்கி ஓடினர். அவர் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. நிர்வாணமாக இருந்த அவர் கைகளால் உடலை மூடியபடி ரோட்டில் விழுந்து அழுது புரண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் இருந்து உடை வாங்கி கொடுத்தனர். அதனை அணிந்த பின்பு அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய மக்கள், அவர் ஏன்? நிர்வாணமாக ஓடி வந்தார் என கேட்டனர்.
அதற்கு அந்த பெண், திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த இளைஞன், தன்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது ஆடைகளையும் கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறினார். அதிகாலையில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது தப்பி வந்ததாகவும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சந்தேகநபரை தேடிப்பிடித்து விசாரித்ததில், ஒரே நிறுவனத்தில் வேலைச்செய்யும் இருவரும் காதலர்கள் என்றும், வேறொரு நபருடன் அப்பெண் பேசியதால், இவ்வாறு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு, ஆடைகளை கிழித்தெறிந்து, நிர்வாணக்கோலத்தில் படம்பிடித்து, சமூகவலைத்தளங்களில் ஏற்றிவிடுவதாக அச்சுறுத்தி இரவு முழுவதும் அடைத்து வைத்துள்ளார். எனினும், அவ்விளைஞன் தூக்கத்தில் இருந்த நேரத்தில் அப்பெண் தப்பியோடி வந்துள்ளார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago