Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 27 வயதான இளைஞனின் காதலிக்கு கடந்த 28 ஆம் திகதி பிறந்த நாளாகும் அதனால் அந்த பெண்ணுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்து அசத்த வேண்டுமென அவ்விளைஞன் ஆசைப்பட்டார்.
அதன்படி, விலையுயர்ந்த கையடக்க தொலைபேசியை பரிசாக கொடுக்க முடிவு செய்தார். இதை தொடர்ந்து ஜேடிபி நகர்ப்பகுதியில் இயங்கி வரும் மிகப்பெரிய செல்போன் நிலையமொன்றுக்குள் இரவு நுழைந்தார். அப்போது அந்த விற்பனை நிலையம் மூடும் நேரம் என்பதால், கதவுகளை அடைத்து பூட்ட ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்தனர். உடனே இந்த இளைஞன் யாருக்கும் தெரியாமல் கடையின் மலசலக்கூடத்துக்குள் சென்று ஒழிந்துகொண்டான்.
கடையை ஊழியர்கள் மூடிவிட்டு சென்றபிறகு, மலசலக்கூடத்தில் இருந்து வெளியே வந்த இளைஞன், விலை உயர்ந்த கையடக்க தொலைபேசியை தேடினார். அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து கையடக்க தொலைபேசிகளும் அழகாக இருந்ததால், அவைகளில் இருந்து 7 கையடக்க தொலைபேசிகளை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான். பிறகு மறுபடியும் அதே கடையின் மலசலக்கூடத்துக்குள் ஒளிந்து கொண்டான். மறுநாள் காலை வரை இந்த அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.
காலையில் வழக்கம்போல், ஊழியர்கள் கடையை திறந்து வந்துள்ளனர். இவரும் எதுவும் தெரியாததுபோல், மலசலக்கூடத்தில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார். ஆனால் அவர் எடுத்து சென்ற கையடக்க தொலைபேசிகளில் ஒன்று கீழே விழுந்து கிடந்து உள்ளது. அதை கடை ஊழியர் ஒருவர் பார்த்து உள்ளார். அப்போதுதான் கடையை திறந்துள்ள நிலையில், கீழே எப்படி கையடக்க தொலைபேசி விழுந்திருக்கும் என்று ஆராயந்தபோது தான், மேலும் சில கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனமை தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஐ.எம்,ஐ நம்பரை வைத்து, திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் இருக்கும் இடமும், பாவிப்பவரின் விவரங்களும் தெரியவந்தன. பிறகு பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பிடிஎம் லேஅவுட் பகுதியில் தங்கி ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
திருடிய 7 கையடக்க தொலைபேசிகளில் 6 யை காதலிக்கு பரிசளித்துவிட்டு, மீதி ஒன்றை அவர் பயன்படுத்தியுள்ளார்.அவைகளின் மதிப்பு 5 இலட்சம் ரூபாயாகும்.
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago