Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தில், காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மநிலம் - முசாபர்நகர் மாவட்டம், சாட்தவாலா கிராமத்தை சேர்ந்த இளைஞரும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதனிடையே, இருவரின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இளைஞருக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முசாபர்நகரில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (22), தனது காதலியை அழைத்து வந்துள்ளார். அப்போது, தன்னை காதலித்து ஏமாற்றி தற்போது வெறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறாயா என இளம்பெண் தனது காதலனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், இளம்பெண் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு காதலின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இதனால், குறித்த இளைஞன் கதறி துடித்துள்ளார்.
இளைஞனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
23 minute ago
30 minute ago