2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காதலியை நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காதலன் கைது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் கொடிகேஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சமூக வலைதளம் மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார். இருவரும்  அலைபேசி எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்த நிலையில் அந்த வாலிபர், தனது காதலியான இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்து பின்னர் அவர் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை காண்பித்து, மிரட்டி   பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் தனது காதலியை தனது நண்பர்கள் சிலருக்கும் விருந்தாக்கி உள்ளார்.

இதுகுறித்து அறிந்த அந்த பெண், கொடிகேஹள்ளி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனையடுத்து குறித்த பெண்ணின் காதலன் ஜார்ஜ் , அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சாஷி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X