Editorial / 2024 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் கலிகா ஹவேலி என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு பிரபல கட்சியின் கொடியுடன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இது குறித்த பதிவில், பிரபல தேசிய கட்சியின் கொடியுடன் இருக்கும் காரில் நடக்கும் ஆபாசத்தை பாருங்கள்.
அந்த கட்சியின் தலைவர்கள் அனைவரும் அனைத்து தவறான செயல்களையும் செய்வதற்கு லைசன்ஸ் பெற்றுள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களை யாரும் தடுக்க முடியாது. மாநிலத்தின் அசுத்தத்தை சுத்தம் செய்ய இந்த கார்களை தூக்கி எறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உத்திர பிரதேச காங்கிரஸ் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago