Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 15 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சக்தி கொள்கை நிறுவனம், காற்றின் தரம் மனித வாழ்வு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, விரிவான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி எனத் தெரியவந்துள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
அதிக மாசு கொண்ட நாடுகளில், பங்களாதேஸூக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு என்பன முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் காற்று மாசு, கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கும். இதே நிலை நீட்டித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 வயது வரை குறையும். உலக அளவில் நிலவும் காற்று மாசுவை பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும். காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய தெற்காசிய நாடுகளில் தான் காணப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி, இந்தியாவில் புதுடெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்சினை உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .