2025 மே 01, வியாழக்கிழமை

காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு: ஐவர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில், சனிக்கிழமை (19) இரவு பெய்த கனமழை காரணமாக, அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், வீதிகள் முற்றிலும் சேதமடைந்தன.

வெள்ளம், நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டன. ஆனாலும், இந்த சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

கனமழை, வெள்ளத்தால் ரைசி மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .