Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
“தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய டிஜிட்டல் தடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருந்து அவர்களை இயக்கியது தெரிய வந்துள்ளது.
இந்திய பாதுகாப்பு படை முகாம்கள் குறித்த தகவல்கள், பொலிஸ் பாதுகாப்பு ரோந்து இயக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ அமைப்பு புதிய டிஜிட்டல் செயலி வசதியுடன் தகவல்களை வழங்கி உள்ளது.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள சர்வர்களை கொண்ட ரேடியோ தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.
சமீபத்தில் அதிக திறமை கொண்ட பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் அனுப்ப பாகிஸ்தானில் கூட்டுச்சதி நடந்துள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
36 minute ago