2025 மே 09, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் பந்தால் பறிபோன சிறுவனின் உயிர்

Editorial   / 2024 மே 07 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் ஒருவரின் அந்தரங்கப் பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. 

குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக குறித்த சிறுவனை நோக்கி அடித்துள்ளார்.

இதில் அந்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X