2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழிந்த தாள்களுக்கு மாதமொரு பிரயாணி

Ilango Bharathy   / 2021 ஜூலை 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகேயுள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணிக்  கடையில், ‘பொதுமக்களிடம் உள்ள பழைய கிழிந்த நாணயத்தாள்களுக்கு பிரியாணி விற்கப்படும்‘ எனக் கடை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (10) குறித்த பிரியாணிக் கடையில் பழைய கிழிந்த நாணயத்தாள்களைக் கொடுத்து மக்கள் பிரியாணி வாங்கிச் செல்லக் குவிந்துள்ளனர்.

பயன்படுத்த முடியாத கிழிந்த நாணயத்தாள்களைவெளிக் கொண்டு வரவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே இவ்வறிவிப்பு செய்யப்பட்டிருந்தாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களிடம் உள்ள ஆர்வத்தைக் கண்ட கடை உரிமையாளர் மாதம் ஒருமுறை இதுபோன்று பிரியாணி விற்பனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X