2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குடியரசுத் தலைவர் புகழாரம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

"சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பாலின சமத்துவத்தின் அடையாளமாக சென்னைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம் கல்வியை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது" என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர், அவர் பேசியது: "சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. பதக்கங்கள் மற்றும் பட்டங்களை பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழின் சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பொக்கிஷம். திருக்குறள் அறிவுக்களஞ்சியமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களும், சிற்பங்களும் தமிழகத்தின் கலை சிறப்பினை விவரிக்கின்றன. கலை, இலக்கியம் என கலாசாரம் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X