Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ‘யுவராஜ்‘. 42 வயதான அவரும் அவரது மனைவியும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 ஆவது மகளுக்கும் சக்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான தம்பதி, ‘குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம்‘ என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு யுவராஜ், தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்று தமது மகள்கள் இருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் 2 மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தம்பதியும் ஆற்றில் குதித்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .