2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குரங்கை பிழைக்க வைத்த இளைஞர்

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு இளைஞர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றியுள்ளார்.

 இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் நேற்று (23) திகதி மாலை குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கம் அடைந்தது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த நிதிஷ் என்ற இளைஞர், அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது இரண்டு கைகளை வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றியுள்ளார். இதனையடுத்து குரங்கு அங்கிருந்து சென்றது.

மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர் நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X