2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கேரளாவில் மற்றுமொரு புதிய வைரஸ் ’ஸிகா’!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 11 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை :

'ஸிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை; கொசு தானே என, அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம்' என, டொக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுவதுமாக வெளிவராத நிலையில்,'ஸிகா' வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், திருவனந்தபுரம் அருகே, 24 வயது கர்ப்பிணி ஸிகா வைரசால் பாதிப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நோயினால், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிவக்கப்படுகிறது. கடந்த, 1947ஆம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளிடம், அதன்பின், 1952இல் மனிதர்களிடம் இப்பாதிப்பு இருப்பது உறுதியானது. இதுவரை, 86 நாடுகளில் இப்பாதிப்பு பதிவாகியுள்ளது.

கர்ப்பிணியிடம் இருந்து குழந்தைக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம். உடலுறவின் போதும் பரவுகிறது.தற்போது மழைக் காலம் என்பதால், டயர், பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டுக்கல், தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத்தில் கொசு ஒழிப்புக்கு புகை அடித்தல், மருந்து தெளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். தற்போது காய்ச்சலுடன் வருபவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை, அதன்பின் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரு பாதிப்புகள் இல்லாதபோது, ஸிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X