2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கைகளை இழந்தவருக்கு மாற்று கைகள்

Mayu   / 2024 மார்ச் 08 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில், விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த நபர் ஒருவருக்கு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவொன்று, மாற்று கைகள் பொருத்தி சாதனை படைத்துள்ளது.

வர்ணம் தீட்டும் தொழில் செய்பவரான குறித்த நபர், கடந்த 2020ஆம் ஆண்டு, நடந்த இரயில் விபத்தொன்றில், தனது இரு கைகளையும் இழந்துள்ளார். அதன் பிறகு அவரது வாழ்க்கை வெறுமையாகி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் பாடாசாலை ஒன்றின் முன்னாள் நிர்வாக தலைவரான மீனா மேத்தா என்பவர், விபத்தொன்றில் மூளை சாவு அடைந்துள்ளார். இவர் தனது இறப்பிற்கு பிறகு உடல் உறுப்புகளை தானம் கொடுக்க ஏற்கனவே சம்மதித்திருந்ததால், உறவினர்களின் அனுமதியுடன் இவரது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கருவிழிகள் ஆகியவை வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டது.

அதேபோல் மீனா மேத்தாவின் இரு கைகள் அகற்றப்பட்டு, விபத்தில் கைகளை இழந்த குறித்த நபருக்கு பொருத்தி, மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .