2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கைதான சிவசங்கர் மீது மற்றுமொரு வழக்கு!

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 12 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.

சென்னை கேளம்பாக்கம் அருகே, புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பாடசாலையின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கெனவே, 'போக்சோ' உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சி.பி.சி.ஐ.டி., பொலிஸார்  மூன்று நாட்கள்  விசாரித்தனர்.  இவரால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட, மாணவியின் சகோதரிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது, சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவரை செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X