A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தை ஆளுனர் உரை நிகழ்த்தி தொடங்கி வைப்பது வழக்கம். ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று சட்டசபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக சட்டசபை கூட்டம், சட்டசபை வளாகத்துக்கு பதிலாக கலைவாணர் அரங்கில் நடந்தது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று அரங்கிற்கு அழைத்து வந்தனர்.
பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து ஆளுனர் உரையை வாசித்தார்.
'இன்று நாம் அசாதாரணமான முன்நிகழ்வுகள் அற்ற நிலையில் சந்திக்கிறோம். முன் எப்போதும் காணாத அளவில் மிக பரவலான ஒரு பெருந்தொற்று நோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 எனும் கொரோனா பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசியல் எந்திரங்களையும் திறம்பட ஒருங்கிணைத்த பெருமையும், புகழும் முதலமைச்சரை சாரும்.
உரிய நேரத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன. பெருந்தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலத்திலும் போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் தேவைக்கேற்ப படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு முதலமைச்சர், அனைத்து அமைச்சர்கள், அரசு எந்திரங்கள், குறிப்பாக சுகாதாரம், வருவாய், காவல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய துறைகளில் முன்களப்பணியாளர்கள் இணைந்து ஓரணியாக அயராது உழைத்துள்ளதை நான் மனமாற பாராட்டுகிறேன்' என்றார்.
22 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
8 hours ago
9 hours ago