A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
@ கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருங்கள். முடிந்த அளவு வீட்டிற்குள்ளேயே இருங்கள்.
@ தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள்.
@ முகக் கவசம் அணியுங்கள்; முகக் கவசத்தை மூக்கு, வாய் மூடி உள்ளபடி முழுமையாக பயன்படுத்துங்கள்.
@ மருத்துவமனை, பஸ் பயணம், கடைகளுக்கு செல்லும்போது, தொழிற்சாலை மற்றும் அலுவலங்களில் பணிபுரியும்போது இரண்டு முகக் கவசம் பயன்படுத்துங்கள்.
@ இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான். வரும் முன் காப்போம். கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போமென்று கூறினார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago