2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா கட்டுக்குள் வராவிட்டால் மீண்டும் ஊரடங்கு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம் :

'கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராவிட்டால், மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்' என, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கூட்டத்தில் சுகாதாரத்     துறையினர் பரிந்துரைத்தனர்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு, சராசரியாக, 5,000க்கும் அதிகமாக உள்ளது. நேற்று, 5,266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நோய் பரவல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினர் விளக்கமளித்தனர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது: கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தாமல் கல்வி நிலையங்கள் திறக்க கூடாது. கூடுதல் தளர்வுகள் அளிக்கக்கூடாது. தியேட்டர்களில், 100 சதவீத இருக்கை பயன்பாடு உட்பட, மத்திய அரசின் தளர்வுகளை கேரளாவில் நடைமுறைப்படுத்த இயலாது.

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.'கேரளாவில் பரவும் கொரோனா வீரியமிக்கது' என, நான்கு மாதங்களுக்கு முன் சுகாதாரத்துறை எச்சரித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .