A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று விடு திரும்பினார். அவரை மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 5 நாட்கள் எந்தப் பணியிலும் ஈடுபடாமல் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறை தொடங்கும் முன்னரே கடந்த நவம்பர் மாதமே ஸ்டாலின் தூதுவர்கள் எனத் திமுகவின் முன்னணி நிர்வாகிகள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி தொகுதியாகச் சென்று திமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தார்.
கொரோனா தொற்று குறைந்திருந்த காலத்தில் பிரசாரத்தை ஆரம்பித்த கனிமொழி, மீண்டும் இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கிய நேரத்திலும் பிரசாரத்தைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிகவின் பல வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
35 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
47 minute ago