A.K.M. Ramzy / 2021 மார்ச் 02 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள், தங்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த மறுப்பு தெரிவித்து விட்டனர்.
நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், தலைநகர் டெல்லியில் 136 தனியார் ஆஸ்பத்திரிகள் உட்பட 196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், எல்லையில் போராடும் வயதான விவசாயிகள், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, 80 வயதான பால்பிர் சிங் ராஜேவால் என்ற விவசாயி கூறியதாவது:கொரோனா தடுப்பூசி, எனக்குத் தேவையில்லை. நாங்கள் கொரோனாவை கொன்றுவிட்டோம்.
விளைநிலங்களில் கடுமையாக உழைப்பதால், வைரசை எதிர்கொள்ளும் சக்தி எங்களிடம் உள்ளது. எனவே, கொரோனாவுக்கு, நாங்கள் பயப்பட மாட்டோம் என்றார்.
குல்வந்த் சிங் சந்து, 70, என்ற விவசாயி கூறுகையில், டெல்லி எல்லைகளில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எனினும், இதில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை," என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago