A.K.M. Ramzy / 2021 மார்ச் 17 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதன் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பதிலளித்துள்ளார்.
சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்தார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சத்ய பிரத சாகு, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.
பீகாரில் கொரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில் தான் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது என்றும், பீகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது இருந்த கொரோனா பாதிப்பு அளவுக்கு தற்போது தமிழகத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago