A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
சசிகலா இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய வருகை குறித்து பேட்டி அளித்த டிடிவி தினகரன், சசிகலா உடல் நலன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்து சென்னை திரும்பினார் சசிகலா. அதிமுக கொடியைக் கட்டிச் செல்லக் கூடாது என சசிகலாவுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஓசூர் எல்லை அருகே வந்தபோது பிராடோ காரில் கொடி கட்டியிருந்ததை பொலிஸார் அகற்றச் சொன்னதால் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கியின் காரில் ஏறிப் பயணித்தார்.
அவருக்கு வரவேற்பு அதிகமாக கொடுக்கப்பட்டதால் மிகத் தாமதமாக 23 மணி நேரத்திற்குப் பின் சென்னை திரும்பினார்.
சசிகலா சென்னை திரும்பியபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன்;
எனது இனிய நண்பர் ரஜினிகாந்த் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சசிகலா உடல் நலன் குறித்துக் கேட்டறிந்தார் என்று தினகரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இன்னும் பலர் நலம் விசாரித்தார்கள். ஒரு அமைச்சரும், எம்எல்ஏவும் நலம் விசாரித்தார்கள்.
அவர்கள் பெயரைச் சொன்னால் சங்கடம். அதே நேரம் ரஜினிகாந்த் எனது நண்பர். அவர் பெயரைச் சொல்லலாம் தவறில்லை என்று தினகரன் குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தலைவர்களுடன் நட்பு பேணுபவர்.
மறைந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டெல்லி தலைவர்கள் என அனைவருடன் நட்பைப் பேணுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
48 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
48 minute ago
7 hours ago