A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவாரூர்
திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான 75.46 ஏக்கர் பரப்பளவிலான சொத்துகள் தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை திருவாரூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று பிறப்பித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா, அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசிக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ளசொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள 34.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம், கட்டிடங்கள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வண்டாம்பாளை பகுதியில் உள்ள 34.24 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இவை வண்டாம்பாளையில் செயல்பட்டு வந்த ‘ராமராஜ் பிரைவேட் அக்ரோ மில்ஸ் லிமிடெட்’ என்றபெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.இச்சொத்துகள் அனைத்தும் வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இந்தசொத்துகள் தமிழக அரசின் சொத்துகள் என தெரிவிக்கப்படுகிறது.
16 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
8 hours ago
9 hours ago